பக்கம்:திரு அம்மானை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - திரு அம்மானை அவனுக்கு அப்படி ஓர் இடம் கிடைத்தது பூவுலகத்தில் உள்ள மெய்யன்பர்கள் தமக்கு உள்ள எல்லாவற்றையும் தனக்கு அர்ப்பணம் செய்துவிட்டு, எந்தப் பயனேயும் எதிர் பாராமல், கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி, வீடும். வேண்டா விறலின் விளங். கினதை அவன் கண்டான். "ஓ! நாம் குடிபுகுந்து தங்குவதற்குரிய இடமும் இருக்கிறதே! எங்கெங்கோ தேடினேமே! இப்படி ஒரு தூய இடம் இருக்கும்போது வேறு இடங்களைத் தேடி அலேய வேண்டுமா?' என்று எண்ணி அந்த மெய்யடியாரை நோக்கி வந்தான். தான் வந்து. பக்தர்கள் தம்மை இறைவன் திருவருளைப் பெறுவதற். குரிய தகுதி பெற்றவர்களாக எண்ணுவதில்லை. தம்மை மிக இழிந்தவர்களாகவே எண்ணி, நம் தகுதியின்மையை கோக்கி இறைவன் வராமல் இருந்து விடுவானே' என்று. ஏங்கி, எல்லாவற்றையும் மறந்து, உள்ளத்தில் உள்ள காமம் முதலிய துாசுகளே யெல்லாம் ஒழித்து, அதைத் தூயதாக வைத்திருந்தார்கள். இறைவன் அந்த உள்ளமே தன்னுடைய இல்லமாக எண்ணி அதை அணுகினன். தம்மை காய் போன்றவர்களாக, இழிந்தவர்களாக எண்ணி உருகும் அவர்களுக்கு அருள் செய்யப் புகுந்தான். அவர்கள் குழந்தையைப் போல இருந்தார்கள். ஆடம்பர மான உடை உடுத்தவில்லை. தவத்தைப் பிறர் காணச் செய்யவில்லை. உள்ளத்திலுள்ள அகந்தைப் பேயை ஒட்டிச் சுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள். தன் குழந்தையை நாடிவரும் தாயைப்போல இறைவன் வந்தான். அந்த மெய்யன்பர்களுக்கு மிகவும் சிறப்பான அருளைச் செய்யப் புகுந்தான். அவர்களிடம் தலைமையான அன்பு அவனுக்கு உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/46&oldid=894916" இலிருந்து மீள்விக்கப்பட்டது