பக்கம்:திரு அம்மானை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதின் தெளிவு -- 33 தான் வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு. மாணிக்கவாசகர் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர். தமக்கு இறைவன் தலையளி செய்ததை எண்ணுகிருர், அழுக்கு மூட்டையாகிய இந்த உடம்பை ஞானிகள் அருவருப்பார்கள். ஆலுைம் அந்த வீட்டில்தானேஅவர்கள் குடியிருக்கிருர்கள்? அது சிறு குடிசை போல இருந்தாலும் உள்ளே சுத்தமாக இருக்கிறது. மணிவாசகர் உள்ளம் தூய அன்பு மணமும் ஞான ஒளியும் வீசும் சிறு குடிலாக இருக்கிறது. - - இறைவன் அந்த இடத்தில் புகுந்தான். ஊன் நிரம்பிய உடம்புக்குள் அவன் புகுந்தான் அதற்குள்ளே அவன் எழுந்தருளியவுடன் அந்த உள்ளத்தில் ஒளி உண்டா யிற்று. சுத்தம் செய்த இடத்தில் விளக்கை வைத்தால் எங்கும் ஒளி பரவுவதைப் போல ஆயிற்று. அங்கே புகுந்த வுடன் அந்த உள்ளத்தில் ஒளி உண்டாக, அதன் விக்ளவாக அந்த உடம்பிலும் சில மாற்றங்கள் உண்டாயின, உடம்பிலுள்ள உரோமங்களெல்லாம் குத்திட்டு கின்றன. அவற்றிற்குத் தனியே உயிரைத் தந்ததுபோல அவை கிமிர்ந்து கின்றன. வீட்டு வாயில் திண்ணையில் சும்மா கிடந்த மக்கள் உள்ளே அரசன் புகுந்தான் என்பது தெரிந்து எழுந்து கின்று பரபரப்பாக இருப்பார்கள். அங்கே யாவரும் மலர்ச்சியுடன் நிற்பார்கள். அவ்வாறே உள்ளே அருட்கடலாகிய இறைவன் புகுந்ததனல் புறத்தே அற்புதம் நிகழ்ந்தது. அவன் உரோமங்களுக்குள்ளே உயிரைப்பெய்துவிட்டானே? இவ்வளவு காலம் இல்லாத புள காங்கிதம் அல்லவா இப்போது உண்டாகிவிட்டது? தன் நாயகன் தன்னக் தொட்டவுடன் காதலிக்கு உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறியும். ஆனந்த உணர்ச் சியின் ஆரம்பம் அது. அப்படி இறைவகிைய நாயகன் 3 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/47&oldid=894918" இலிருந்து மீள்விக்கப்பட்டது