பக்கம்:திரு அம்மானை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திரு அம்மானே உள்ளே புகுந்தவுடன் உர்ோமங்கள் உயிர்பெற்றனபோல் புளகம் போர்த்து கின்றன. அப்படி கிற்கும்படி அவன் பண்ணி விட்டான். - * - ஊன் வந்து, உரோமங்கள் உள்ளே உயிர்ப் பெய்து. பிறகு ஒரே ஆனந்தந்தான். காதலன் காதலியைத் தொட்டவுடன் அவளுக்கு மெய் புளகம் அரும்புகிறது. அதற்கு முன்னே, அவன் அவள் இருக்கும் தனியறையில் புகுந்தவுடனே உடம்பெல்லாம் குப்பென்று வியர்க்கிறது, தொட்டவுடன் என்றும் இல்லாத புதுமையாகப் புளகாங் கிதம் உண்டாகிறது. மணிவாசகர் இந்த விலையில் இருந்தார். - பிறகு ஆனந்த அநுபவம் கிட்டியது. அந்த அநுப வத்தை எப்படிச் சொல்வது? தேனே உண்டால் எப்படி இருக்கும்? அதைச் சொல்லலாமா? அது காவில் மாத் திரம் சுவையை உண்டாக்கும். இறைவன் கழல் அவரு டைய உள்ளத்தே தேன் புகுந்தது போலப் புகுந்தது. உடம்பெல்லாம். உள்ளமெல்லாம் நாவாகி அந்தத் தேனைச் சுவைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஓர் இன்ப அநுபவம் ஏற்பட்டது. தேனையா சொல்வது? அது உலகத்தில் கிடைப்பது தானே? இந்த ஆனந்தாதுபவத்தைத் தர அதற்குச் சக்தி ஏது? சுவை பெற்ற பண்டங்களே அமுது என்று சொல்கி ருேம். அந்த அமுதை நாம் கண்டதில்லை; சுவைத்த தில்லை. ஆனல் அது எல்லாவற்றையும் விட அதிகமான சுவையுடைய தென்று யாவரும் சொல்லிக் கொண்டிருக் இருர்கள். அந்த அமுதந்தானே இது தேவர்கள் உண்ட அமுதம் அன்று இது. அது கடலேக் கடைந்தபோது கலங் கிக் குழம்பிவந்தது. இந்த அமுதம் குழப்பம் இல்லாதது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/48&oldid=894920" இலிருந்து மீள்விக்கப்பட்டது