பக்கம்:திரு அம்மானை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதின் தெளிவு - 35 குழப்பத்தைத் தெளிவிப்பது. அமுதின் தெளி என்று ஒரு வகையாகச் சொல்லலாம். - புலனுகர்ச்சி மண்டிக் கிடந்த உள்ளத்தில் உயிரைப் பெய்யும் தெளிந்த அமுதாக இனிக்கிறது; அந்தத் தெளிவில் ஒளியும் இருக்கிறது. மெய்ஞ்ஞானம் என்னும் ஒளியும் புலன் கடந்த பேரானந்தமும் இப்போது கிரம்பி வழிகின்றன. உரோமாஞ்சிதம் அதற்கு அடையாளமாக இருக்கிறது. - தேன் வந்து அமுதின் தெளி வந்து ஒளி வந்த, இந்த இன்ப அநுபவமும் மெய்ஞ்ஞான ஒளியும் கிடைக்க என்ன காரணம் மிக்க பெருமையை உடைய இறைவன் திருவடி உள்ளே புகுந்தமையால் உண்டான விக்ளவு இது. அந்தக் கழல் மீண்டது; எங்கே அன்பர் இருந் தாலும் அவர் வரையில் நீளும் திருவடி, வார்கழல், வான் வந்த வார்கழல் அது. அவன் உலகத்துக்கு வந்தான். மணிவாசகருக்குத் தலையளி செய்தான். சேய்க்குத் தாய் தன் முழு அன்பையும் வாரி அளிப்பதுபோல அளித்தான். அவருக்கு உள்ளே புகுந்தான். அதன் பயனகப் புறத்திலும் மெய்ப்பாடுகள் உணடாயின. உரோமங்கள் தனியே உயிர் பெற்றவை. போலக் குத்திட்டு கின்றன. அவளுல் விளந்தது ஆகலின் அவனே அப்படிச் செய்தான் என்றுதான் சொல்லவேண் டும். பிறகு தேன் வந்த சுவையும் அமுதின் தெளிவு வந்த அநுபவமும் உண்டாயின; ஒளி படர்ந்தது. பெறுதற்கரிய இந்த அநுபவத்தைத் தந்த அவனுடைய மீண்ட திருவடியை, அம்மானே ஆடும் பெண்ணே, நாம் பாடுவோம்' என்று கூறுகிருர் மணிவாசகப் பெருமான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/49&oldid=894922" இலிருந்து மீள்விக்கப்பட்டது