பக்கம்:திரு அம்மானை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திரு அம்மானே வான்வந்த தேவர்களும் மால்அயைேடு இந்திரனும் கான்கின்று வற்றியும் புற்றுஎழுந்தும் காண்பரிய தான்வந்து நாயேனத் தாய்போல் தலையளித்திட்டு, ஊன்வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து, தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதும்கர்ண் அம்மாய்ை!

  • வானுலகத்தில் வந்த தேவர்களும் திருமாலும் பிர மனும் இந்திரனும் காட்டில் பல காலம் நின்று உணவில் லாமல் உடம்பு வற்றியும், சுற்றிலும் புற்று எழுந்து கிற்கத் தவம் செய்தும் காண்பதற்கு அரிய இறைவன், அடியேன் இருக்கும் இடத்துக்கு வந்து, நாய் போல இழிந்த அடி யேனைத் தாயைப் போலச் சிறந்த அன்பு காட்டி, என் உடம்புக்குள் புகுந்து, என் மயிர்க்கால்களுக்குள்ளே உயி ரைப் புகுத்தி அவை புளகம் போர்க்கச் செய்து, தேனின் சுவை வரவும், தெளிந்த அமுதத்தின் சுவையும் ஒளியும் வரவும் செய்த, தம்மைப் போற்றினவர்களுக்கு இன்பம் வரும்படி செய்யும் பெருமைய்ை உடைய நீண்டதிருவடியை, அம்மானை ஆடும் பெண்ணே, நாம் பாடுவோமாக! "

(வான்-தேவலோகம். மாலோடு, அயனேடு என்மு: கூட்டுக; ஒடு: எண் ஒடு. கான் கின்று-காட்டில் பல காலம் கின்றபடியே. புற்று எழுந்தும்-தம்மைச் சுற்றிப் புற்று எழும்படி ச்ெய்தும்; எழுந்து - எழ; எச்சத்திரிபு. காண்பு - காணுதற்கு தான் - இறை வன். நாயேன் - வெறுத்துக் கக்கிய பொருளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/50&oldid=894924" இலிருந்து மீள்விக்கப்பட்டது