பக்கம்:திரு அம்மானை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதின் தெளிவு 3? மீண்டும் உண்ணப் புகும் காயைப் போல, அநுபவத்தால் இது தீயதென்று அறிந்தும் சிற்றின்பத்தை நுகரப் புகும் தன்மையுடையவன்; கல்லோர் அவையுள் புகுந்தால் ஒட்டும் இழிதகவையுடைய காயைப் போல மெய்த் தொண்டர்கள் கூட்டத்தில் புகும் தகுதியில்லாதவன். தலையளித்திட்டுதலையளி செய்து. நான் யாவரினும் கடையவகை இருந்தும் கான் பெற்றது எல்லா அளியினும் சிறந்த அளி' என்ருர். ஊன் வந்து-உடம்புக்குள் வந்து; ஊன்: ஆகுபெயர். உயிர்ப்பெய்து-உயிரை ஊட்டி. இறந்த உடலம் உயிர் பெற்று எழுந்து கின்ருற்போலே, இதுகாறும் வாளா புறம் போர்த்திருந்த உரோமங்கள் இப்போது குத்திட்டு நின்றன. தேன்-தேனின் சுவை; ஆகு பெயர். வந்து - வர; எச்சத் திரிபு. அமுதின் தெளியோடு ஒளி வந்த கழல். கழல்-காலில் அணியும் வீர கண்டை; இங்கே திருவடியைக் குறித்தது; ஆகுபெயர். வான்-பெருமை. முதலின் வினையாகிய தலை யளித்திட்டு என்பது சினேவினேயாகிய ஒளிவந்த என்றத. ைேடு முடிந்தது. தான் தலையளித்திட்டு. ஊன் வந்து பெய்து ஒளி வந்த கழல், வான்வந்த கழல்,வார்கழல். கழலே: ஏகாரம், பிரிகிலே; மற்றவற்றைப் பாடாமல் அதனேயே பாடுவோம் என்றபடி; தேற்றமும் ஆம். காண்: அசை.) இறைவனுடைய பெருங்கருணையை வியந்து பாடியது இது. - - - திருவாசகத்தில் திருவம்மாணயில் வரும் நான்காவது பாட்டு இது. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/51&oldid=894926" இலிருந்து மீள்விக்கப்பட்டது