பக்கம்:திரு அம்மானை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சைவத் திருமுறைகளில் எட்டாவதாக விளங்குபவை மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகமும் திருக் கோவையாரும். திருவாசகம் மனத்தை உருக்கும் தன்மை வாய்ந்தது. 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத் துக்கும் உருகார்' என்ற பழமொழி அதன் உருக்குங் தன் மையைத் தெளிவாக்குகிறது. சைவர்கள் மாத்திரமன்றி மற்றச் சமயத்தினரும் ஓதி உணர்ந்து உருகும் வகையில் அந்த அருள் நூல் அமைந்திருக்கிறது. கிறிஸ்தவப்பாதிரியா ராகிய ரெவரண்ட் ஜி.யூ. போப் தமிழ் பயின்ருர், தமிழ் நூல்களே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திருக்குறளை யும் நாலடியாரையும் அவர் ஆங்கில மொழியில் பெயர்த்தார். அவை நீதி நூல்களாதலின் எந்தச் சமயத்தாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்தவை. தமிழைப் பயின்ற போது பல வகையான தமிழ் நூல் களையும் அந்தக் கிறிஸ்தவ மதகுரு கற்றர். தேவாரம், திவ்யப்பிரபந்தம் முதலியவற்றையும் படித்திருக்கக் கூடும். அந்த முறையில் திருவாசகத்தையும் படித்தார்; கற்ருர்; அதில் ஆழ்ந்தார். அந்தக் கிறிஸ்தவ்ருடைய உள்ளத்தையும் அது உருக்கியது. "ஆங்கிலமே, இத்தகைய நூல் ஒன்று ஆங்கு இலமே!'என்று எண்ணியிருக்கவேண்டும். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். எனவே, திருவாசகத் துக்கு உருகாதார் என்பது சாதி சமயங் கடந்து யாவருக்கும் அநுபவமாவதையே சொல்வதாகக் கொள்ளலாம். இறைவனுடைய திருவருளேப் பெற வேண்டி ஏங்கி Aற்கும் ஆத்மாவின் வேதனையைத் திருவாசகம் நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/5&oldid=894923" இலிருந்து மீள்விக்கப்பட்டது