பக்கம்:திரு அம்மானை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~60 திரு அம்மானே தன் அன்புக்குரிய சேய் அழுக்குப் பண்ணிக் கொண் .டாலும், அதைக் கண்டு அருவருப்படையாமல் அதன் அழுக்கைப் போக்கி அனேக்கும் தயை காய்க்கு உண்டு. தான் பசித்திருந்தாலும் சேயின் பசியைப் போக்குவதிலே கண்ணுக இருப்பாள். அந்தக் குழந்தை மண்ணில் போய்ப் புரண்டு விளையாடிக் கொண்டிருந்தாலும், அதற்குப் பசிக் குமே என்று எண்ணி, ஒடிச் சென்று எடுத்து வந்து, ரோட்டி உணவூட்டுவாள். இறைவனும் தன் அன்பர் களுக்கு அள்வண்ணமே அருள் செய்து சிவானந்தத்தை வழங்குவான். > - தாயான தத்துவன. -- “தாயிற் சிறந்த தயாவான தத்துவனே' என்று, சிவபுராணத்தில் மணிவாசகர் கூறுகிருர், - இந்த உலகம் பலவேறுபட்ட தோற்ற முடையது. பேதமே இதன் சொரூபம். இந்த உலகத்தில் எள்ளுள் எண்ணெய் போல இறைவன் இருக்கிருன். மாயை என்னும் திரை அவனை மூடிக்கொண்டு மறைத்து கிற்கிறது. அதல்ை மக்கள் உலகத்தைக் காணுகிருர்களே யன்றி இறைவனக் காண்பதில்லை. மாயை என்னும் திரையை நீக்கி விட்டுக் காண்கிறவர்கள் ஞானிகள். அவர்கள் மிகவும் அரியவர்களாகவே இருப்பார்கள். . மாயை.எனும் திரையை நீக்கி நின்னேயார் அறிய வல்லார்” என்று தாயுமானவர் பாடுகிருர், சிப்த்தானம் பெற்றவர்கள் இந்த உலகத்தையே இறைவனுகக் காண்பார்கள். கோயிலில் இறைவனுக்குத் திரையைப் போட்டு அலங்காரம் பண்ணுவார்கள். அலங் காரம் முடிந்தவுடன் திரையை நீக்குவார்கள். அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/74&oldid=894976" இலிருந்து மீள்விக்கப்பட்டது