பக்கம்:திரு அம்மானை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயான தத்துவன் 593 அதல்ைதான் தாமே தம்மைப் பாராட்டிக் கொள்கிருர்கள் போலும் - - மணிவாசகப் பெருமர்ன் தம்மை அடிக்கடி, காயேன்” என்று சொல்லிக் கொள்வார். அழுக்கை நச்சி உண்பதும், ஒருகால் வெறுத்துக் கக்கியதை மீட்டும் உண்பதும், கல் லோர் அவையில் புகும் தகுதியில்லாததும் காய்க்கு இயல்பு, அதுபோல அழுக்காகிய உடம்பை வளர்த்து, சிற்றின்ப மாகிய அழுக்கை நுகர்ந்து, ஒருகால் தீயதை வெறுத் தாலும் மீட்டும் அதில் ஈடுபடுவதும், கல்லோர் சங்கத்தில் சேராமல் இருப்பதும் இழிந்தவர் இயல்பு. அத்தகைய இயல்புடையவராகத் தம்மை எண்ணிக்கொண்டு, காயான கந்தம்மை f என்று சொல்லுகிருர் மணிவாசகர்; பிற அடியார்களேயும் சேர்த்துக் கொண்டு. கந்தம்மை' என்கிருர். அத்தகைய இழிந்த நிலையில் இருந்த அவரை இறை: வன் ஆட்கொண்டானம், அவர் நாய்; அவரை ஆட்கொண் டவன் நாயகன். காயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனை. காயாக இழிந்த நிலையில் இருந்த அவர் இறை வனுக்கு அடிமையாகி விட்டபிறகு அப்பெருமானுடைய செல்வப் பிள்ளையாகி விட்டார். அவன் எல்லோருக்கும் தாயாக இருக்கிருன், முரட்டுப் பிள்ளைகளிடம் தாய் போக அஞ்சுவாள். நல்ல பிள்ளைகளை அணுகிக் கொஞ் சுவாள். இங்கே இந்தப் பிள்ளை இழிந்த நிலையில் இருக் தாலும் கருணேயினல் அவரிடம் வந்து தாயன்பு, காட்டினன். அந்தத் தாய்த்தன்மை அவனிடம் என்றும் கிலே பெற்றிருப்பது. அவனே கிலேயான உண்மைப் பொருள்; தத்துவன். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/73&oldid=894974" இலிருந்து மீள்விக்கப்பட்டது