பக்கம்:திரு அம்மானை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திரு அம்மானை பாண்டியனுடைய ஆட்சிக்குள் இருக்கும் திருப்பெரும் - - ۰ (ل (I6نی தென்னன் பெருந்துறையில் மேயான. அந்தத் தலத்தை விரும்பி வந்து கித்திய வாசம் செய்கிற வன் அவன். அகாதி அந்தணகிைய அவனே வேதியன் என்று அடிக் கடி கூறுவார் மாணிக்கவாசகர். - வேதியன. உலகத்தில் உள்ள ஆன்மாக்களுக்கு அருளே வழங்கு கிறவன் அவன். அவனுடைய சக்தி அருள். அந்த அருட் சக்தியே அம்பிகையாக வடிவெடுத்து இலங்குகிறது. அந்தப் பெருமாட்டியைத் தன்னுடைய ஒரு பாதியில் வைத்து மாதிருக்கும் பாதியகை, அர்த்தகாரீசகை அவன் எழுந்தருளியிருக்கிருன். அவன் எந்த அளவு இருக்கிருனே, அதற்குச் சமமாக அவன் அருள் இருக்கிறது. சத்தன் பாதி, சக்தி பாதியாக இணைந்து கிற்கும் பெருமான் அவன். மாது இருக்கும் பாதியன. - அத்தகைய பெருமான் மணிவாசகரை ஆட்கொண் டான். மணிவாசகர் இறைவன் திருவருளேப் பெற எல்லா வகையிலும் சிறந்த தகுதி பெற்றவர். ஆனால் அவர் தம்மை அப்படிச் சொல்லிக் கொள்வதில்லை. இழித்தே. சொல்லிக் கொள்வார். சிறியவர்களே தம்மைத் தாமே வியந்து பாராட்டிக் கொள்வார்கள். " பணியுமாம் என்றும் பெரும்ை, சிறுமை - அணியுமாம் தன்னை வியந்து ' என்பது திருக்குறள். மற்றவர்கள் வியந்து பாராட்ட மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்ருகத் தெரியும்;.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/72&oldid=894973" இலிருந்து மீள்விக்கப்பட்டது