பக்கம்:திரு அம்மானை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயான தத்துவன் 57 கொண்டிருப்பான்; அவர்களுடைய அந்தரங்கத்தில் கின்று அவர்களே வழிநடத்துவான். - ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளான. ஆல்ை மற்றவர்களுக்கு நெடுந்து ரத்தில் இருப் பவன் அவன். - " காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியன் கண்டாய்" என்பது அப்பர் திருவாக்கு. ‘புறத்தார்க்குச் ச்ேயோன்றன் பூங்கழல்கள் வெல்க' என்று மணிவாசகரே பாடுவார். அவன் மற்றவர்களுக்குச் சேயோனக இருப்பான். சேயானே. - - - - ^ தீய சக்திகளை யெல்லாம் அழிக்க வல்லவன் அவன், அதுவே அவனுடைய பெருவீரம்; சேவகம். அவன் ஆற்றிய வீரச் செயல்களே நினைவுறுத்தும் எட்டுத் தலங்கள் தமிழ் காட்டில் உள்ளன. அவற்றை அட்ட வீரட்டானம் என்பர். வீரஸ்தானம் என்பதே விரட்டானம் , எனத் தமிழில் மருவி வந்தது. மூலஸ்தானம் என்பது மூலட் டானம் என்று வருவது போல. iரட்டானம் என்பதை வீரட்டம் என்றும் வழங்குவது உண்டு. அந்த வீரட் டானத்தில் எழுந்தருளியுள்ள வீரன் அவன். - சேவகன. அவன் எங்கும் இருந்தாலும் சில தலங்களைத் தன்னு டைய அருளே வழங்கி, அன்பர்களைக் குள்ளக்குளிர அருளில் குளிக்கும்படி செய்யும் துறைகளாகக் கொண் டிருக்கிருன். அவற்றில் பெரிய துறையாக இருப்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/71&oldid=894971" இலிருந்து மீள்விக்கப்பட்டது