பக்கம்:திரு அம்மானை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தாயான தத்துவன் கிணப்பும் மறப்பும் நமக்கு இயல்பாக உள்ளவை. ஆல்ை நான் என்ற உணர்வு நம் உள்ளத்தின் அடித்தளத் தில் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற மனே விருத்திகளில் ஒன்ருகிய அகங்காரமே தான் என்ற உணர்வு, அது எப்போதும் நம்மிடமிருந்து நீங்குவதில்லை. எல்லாவற்றையும் மறந்து உறங்கும்போதுகூட அந்த உள்ளுணர்வு இருந்துகொண்டு தான் இருக்கும். மெய்யன்பர்களுக்கு அந்த உள்ளுணர்வு வேறு வகை யாக இருக்கும். இறைவனுக்கு அடியேன் என்ற உணர்வே அது. அந்த கினேவு ஒரு கணமும் அவர்கள் உள்ளத்தி லிருந்து நீங்குவதில்லை. அவர்கள் எப்போதும் ஓயாமல் இறைவனே உள்ளத்தில் உள்கும் இயல்புடையவர்கள். ஓயாதே உள்குவார். அவ்வாறு உள்குவாருடைய தூய உள்ளத்தில் இடம் பிடித்துக்கொண்டு இறைவன் தங்குவான். மற்றவர்களின் உள்ளத்தில் அவன் இருந்தாலும் அவன் உள்ளான் என்ற உணர்வு அவர்களுக்கு இருப்பதில்லை. அன்பர்களோ எப் போதும் கினைத்துக் கொண்டிருப்பதல்ை அவர்கள் உள் ளத்தில் என்றும் மறைவின்றி அவன் காட்சி தந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/70&oldid=894969" இலிருந்து மீள்விக்கப்பட்டது