பக்கம்:திரு அம்மானை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திரு அம்மானே எல்லாப் பிரபஞ்சங்களிலும் பரவியிருப்பது. விரிந்து கிடக்கும் எல்லா மண்டலங்களுக்கும் அவன் ஈசன். - வியன் மண்டலத்து ஈசன். அவனுடைய திருவடிவில் வேறு யாருக்கும் இல்லாத சிறந்த அடையாளம் ஒன்று இருக்கிறது. ஒருவனுடைய கண்ணேப் பார்த்தே அவன் இயல்பைத் தெரிந்து க்ொள்ள லாம். இறைவன் ஞானக் கண்ணே நெற்றியிலே கொண்ட வன். இடக்கண்ணும் வலக்கண்ணும் பார்க்கும் பார்வையை விட நெற்றிக் கண் நடு கிலேயில் கின்று பார்க்கும், அந்தப் பார்வையையுடைய கண்ணுதல் அவன். "இமையாத முக்கண் மூவரிற் பெற்றவன்' என்று இந்தச் சிறப்பை மணிவாசகர் திருக்கோவையாளில் சிறப்பித்துப் பாராட்டுவார். ஆகவே அந்தத் தனிச்சிறப் புள்ள திருக்கண்ணே கினேக்கிருர் அவர். கண் சுமந்த நெற்றிக் கடவுள். இவ்வாறு பலராலும் புகழ்ந்து பாடப் பெற்ற பெரு மான், அர்த்த காரீசுவரகை இருப்பவன், விண்சுமந்த கீர்த் தியை உடையவன், எல்லா உலகங்களுக்கும் தலைவன், வேறு யாருக்கும் இல்லாத ஞானக் கண்ணேப் பெற்றவன், ஒர் ஊரில் வந்து அடிபட்டான். - இது எங்கோ சிற்றுாரில் இரகசியமாக கடந்த செயலா பாண்டியன் இராசதானி நகரத்தில் கடந்தது. மக்கட்கூட்டம் நிரம்பி ஒரே ஆரவாரம் நிறைந்துள்ள மதுரையில் யாவரும் காண அவன் அடிபட்டான். அடி படுவதே அவமானம்; பிறர் கான அடிபடுவது பெரிய அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/82&oldid=894995" இலிருந்து மீள்விக்கப்பட்டது