பக்கம்:திரு அம்மானை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண் சுமந்த பொன்மேனி 67 இரண்டா? அவை மலைபோலக் குவிந்திருக்கின்றன. அத் தகைய பாடற் பகுதியைப் படைத்தது அவன் பரிசு. பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும். அவன் அடிபட்டான். அவன் ஒரு பாதியில் மெல்லிய லாகிய அம்பிகை இடம் கொண்டிருக்கிருள். அவளுக்கும் அந்த அடி பட்டிருக்குமே - பெண் சுமந்த பாகத்தன். யாவருக்கும் கலவகிைய பெருமான் அடியார்கள் வந்து தரிசித்து உய்யும்பொருட்டுத் திருப்பெருந் துறையில் கித்திய வாசம் செய்கின்ருன். - பெம்மான், பெருந்துறையான். அவனுடைய கீர்த்தி எங்கும் பரவியிருக்கிறது. மனிதர்கள் பேசுவதை விடத் தேவலோகத்தில் உள்ள வர்கள் அதிகமாகப் புகழ்கிருர்கள். அவர்கள் அறிவுடைய வர்களாதலாலும் இறைவன் தேவ்ர்களுக்கெல்லாம் பெரிய தேவனகிய மகாதேவதைலாலும் அவர்கள் புகழ்கிருர்கள். பக்தர்கள் நிலவுலகத்தில் இறைவன் திருவருள் பெற்று அவனே வாயாரப் புகழ்கிருர்கள். நாம் மட்டும் சும்மா இருக்கலாமா? என்று விண்ணில் உள்ளவர்களும் அவனைப் புகழ்கிருர்கள். இப்படி இறைவனுடைய கீர்த்தி தேவ லோகத்திலும் பரவி கிற்கிறது. விண் சுமந்த கீர்த்தி. அவன் திருப் பெருந்துறையில் எழுந்தருளி அன்பர் களுக்கு எளிவந்தவகை இருந்தாலும் அவனுடைய ஆட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/81&oldid=894993" இலிருந்து மீள்விக்கப்பட்டது