பக்கம்:திரு அம்மானை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திரு அம்மானே என்று திருவிளையாடற் புராணம் இக் த நிகழ்ச்சியைச் சொல்கிறது. ... ஆனல், கண்ணன் அடிபட்ட புண்ணில் ஈ மொய்த்த போது அவன் குலுங்க, எல்லா உலகமும் சவித்தன என்று காளமேகப் புலவர் ஒரு பாட்டுப் பாடியிருக்கிருர். " வாரணங்கள் எட்டும் மகமேரு வும்கடலும் தாரணியும் எல்லாம் சலித்தனவால்-நாரணனப் பண்வாய் இடைச்சி பருமத்தி ல்ைஅடித்த புண்வாயில் ஈமொய்த்த போது ' என்பது அந்தப் பாட்டு. சிவஞான வள்ளலார் காலத்தில் இந்தப் பாட்டு எழவில்லை. ஆதலின் அவர் இறைவனுடைய வியாபகத்தைப் பின்வருமாறு பாடினர்: “ எண்கணனைக் குட்டியகுட்டு எங்கேனும் பட்டதோ? மங்கைஅரி மேல் அடித்த மத்தடிபோய்-எங்கேனும் பட்டதோ? எங்கள் பரமன்மேல் பட்டஅடி பட்டதே எவ்விடத்தும் பார்.” எது எப்படியாயினும் சிவபெருமான் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணுனந்தன் என் பதற்குத் தட்டில்லே. மண் சுமந்த திருவிளையாடலால் அதை உணர்கிருேம். - மணிவர்சகப் பெருமான் தம்பொருட்டு இறைவன் மண் சுமந்து அடிபட்ட பெருங்கருணையை நினைக்கிருர். அவன் கூலியாளாக வரக்கூடியவன? எவ்வளவு பெரியவன்! அவன் பரம் பொருள் அல்லவா? அவனுடைய பெருமை யைப் பெரியவர்கள் பல மொழிகளிலும் பாடியிருக் கிருர்கள். அவனுடைய தன்மையைப் பண் அமைக் த பாடல் களால் பாடிப் புகழ்ந்திருக்கிருர்கள். அவை ஒன்ரு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/80&oldid=894991" இலிருந்து மீள்விக்கப்பட்டது