பக்கம்:திரு அம்மானை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண் சுமந்த பொன்மேனி - 岱莎 பிரமன் எங்கும் புரந்திருந்தவனுக இருப்பின் அந்தக் குட்டு எல்லார் தலையிலும் பட்டிருக்க வேண்டும். அப்படி ஆக வில்லை. ஆகையால் அவன் எங்கும் நிறைந்தவன் என்று சொல்ல இயலாது. - 'எண்கணனைக் குட்டிய குட்டு எங்கேனும் பட்டதோ?’ என்று கேட்கிருர் சிவஞான வள்ளலார். அந்தக் குட்டை அருகில் இருந்த எவரும் படவில்லை. அப்படி இருக்க, அவனே எங்கும் பரந்துளன் என்று சொல்ல முடியுமா? திருமாலுக்கும் அத்தகைய சந்தர்ப்பம் ஒன்று வாய்த் தது. கண்ணகை அவன் திருவவதாரம் செய்த காலத்தில் திருட்டுத் தனமாக வெண்ணெயைக் கவர்ந்து உண்ட போது அவனே யசோதை மத்தில்ை அடித்தாள். அந்த அடி அவன் மேல்மட்டும் பட்டதே அன்றி, வேறு ஒருவர் மேலும் படவில்லை. . . ' மங்கை அரி மேல் அடித்த மத்தடி போய் - எங்கேனும் பட்டதோ?” என்று சிவஞான வள்ளலார் இரண்டாவது கேள்வியை விடுக்கிரு.ர். . - ஆல்ை பாண்டியன் இறைவனைப் பிரம்பால் அடித்த போது அந்த அடி எல்லார்மேலும் பட்டது. " வானவர் மனிதர் நாகர்புள் விலங்கு மாசுணம் சிதல் எறும் பாதி ஆனபல் சரமும் மலேமரம் கொடிபுல் ஆதியாம் அசரமும் பட்ட, ஊனடை கருவும் பட்டன; தழும்போ டுதித்தன; உயிரில்ஓ வியமூம் தான்அடிபட்ட சராசர சடங்கள் - தமக்குயிர் ஆயினேன் தழும்பு ' 5 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/79&oldid=894987" இலிருந்து மீள்விக்கப்பட்டது