பக்கம்:திரு அம்மானை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. புண் சுமந்த பொன்மேனி இறைவன் மணிவாசகப் பெருமானுக்காகச் சில திருவிளையாடல்களைப் புரிந்தான். உலகமெல்லாம் காண அவன் அவற்றைச் செய்தான். மாணிக்கவாசகரின் பெருமை யைப் பாண்டிய மன்னனுக்கு அறிவிக்கும் பொருட்டு அவன் கூலியாளாக வந்து பாண்டியன் அடித்த அடியைப் பெற்ருன். மிகமிகச் சிறந்தவனகிய அவன் மண் சுமக்கும் வேலைக்காரகை எழுந்தருளி, அடிபட்டு, தன்னுடைய சர்வ வியாபகத் தன்மையை நிரூபித்தான். இதுபற்றிச் சிவஞான வள்ளலார் ஒரு பாடல் பாடுகிருர், . திரி மூர்த்திகள் என்று பிரம விஷ்ணு சிவன் ஆகிய மூவரையும் சொல்வார்கள். மூவரையும் இனமாக வைத்துச் சொன்னலும் மூவரும் ஒரு கிகரினர் அல்லர். சர்வ வியாபகத்தன்மை பிரம விஷ்ணுக்களுக்கு இல்லை. இது சைவர்களுடைய கருத்து. -- எங்கும் வியாபித்திருப்பதைப் புலப்படுத்துவதற்கு, ஏற்ற சக்தர்ப்பங்கள் அந்த மூவருக்கும் வாய்த்தன. அந்தச் சோதனையில் சிவபெருமானே தன் சர்வ வியாபகத் தன்மையை கிறுவினன். எப்படி? பிரமன் ஒரு சமயம் குட்டுப்பட்டான். அகங்காரம் கொண்டிருந்த அவன் தலையில் முருகன் குட்டின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/78&oldid=894985" இலிருந்து மீள்விக்கப்பட்டது