பக்கம்:திரு அம்மானை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. திரு அம்மானை மண் சுமந்த பெருமான், பெண் சுமந்த பாகன், விண் சுமந்த புகழான், கண் சுமந்த நெற்றியான் என்று சொல்லும் போது அவனுடைய பெருமைகளெல்லாம் எப்படி வெளிப்படுகின்றன. அவற்றையெல்லாம் அள விறந்து சுமப்பதனால் அவன் பெருமையும் அளவிறந்து கிற்கிறது. அவன் இப்போது யாரோ ஒர் அரசல்ை மொத் துண்டு புண் சுமந்தான். இது அவமானம் அல்லவா? தன்னலத்துக்காக ஒன்றைச் செய்து அடிபட்டாலும், பிறர் பொருளே வவ்வியோ வேறு குற்றம் செய்தோ அடி பட்டாலும் அது அவமானமாகும். மாணிக்கவாசகருக்காக, அவர் விடுதலே பெறுவதற்காக, ஆண்டவன் அடிபட்டான். அது அவனுக்குப் புகழை உண்டாக்குமேயன்றி இகழ்ச்சி யைத் தராது. தேச சுதந்தரத்துக்காக அடிபட்டும் உதை பட்டும் சிறைப்பட்டும் தொண்டாற்றிய பல பெரியவர்களே கர்ம் இப்போது போற்றுகிருேம், தேச கலத்துக் காக அவர் பட்டவற்றை இழிவாகக் கருதாமல் பெரிய தியாகமாகக் கொள்கிருேம். பாரத தேவியின் விடுதலைக் காக அவர்கள் அடிபட்டார்கள். இறைவனும் மாணிக்க வாசகரின் விடுதலைக்காக அடிபட்டான். அந்தப்பாண்டியன் கனவில் போய், “நீ அவனை விடுதலை செய்' என்று சொல்லியிருக்கலாம். அப்படிச் செய்தால் மணிவாசகர் பெருமையை உலகம் அறிய இயலாது. இறைவன் ஒரு காரியம் செய்தால் அது பல வகையில் பயன்படும். அவன் பிட்டுக்கு மண் சுமந்தமையால் பிட்டு வாணிச்சி அருள் பெற்ருள்; பாண்டியன் மணிவாசகர் பெருமையை உணர்ந் தான்; உலகமே அவர் உயர்வை உணர்ந்து கொண்டது; இறைவன் எங்கும் பரந்தவன் என்ற உண்மை வெளிப் பட்டது; இறைவன் தன் அடியாருக்காக எந்த நிலைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/84&oldid=894999" இலிருந்து மீள்விக்கப்பட்டது