பக்கம்:திரு அம்மானை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண் சுமந்த பொன்மேனி 71 இறங்கி வருவான் என்ற பெருங்கருணே புலனுயிற்று. மண் சுமந்து புண் சுமந்த வரலாறு இவ்வாறு பல உண்மைகளே உணர்த்துகிறது. - அக்கோவால் மொத்துண்டு - புண் சுமந்த் பொன்மேனி பாடுதுங்காண் அம்மாளுய்! அந்தத் திருமேனி எத்தகையது: “பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்’ என்று பொன்வண்ணத் தந்தாதி அந்தத் திருமேனியைப் புகழ்கிறது. முரட்டு மேனியில் புண்பட்டால் அது அவ்வள வாகத் தெரியாது ஆல்ை அவனுடைய பொன் மேனி அடிபட்டு அந்தப் புண்ணேச் சுமந்ததே செங்கிறம் உடைய, வர்கள் உடம்பில் சிறிது அடிபட்டாலும் மிகச் சிவந்து காட்டும். இறைவன் பொன்மேனியில் பட்ட அடி புண்ணேப் போலச் செக்கச் செவேலென்று காட்சியளிக்கிறது. கற்பனைக் கண்ணுல் மணிவாசகர் அதைப் பார்க்கிருர், "ஐயோ! இந்தப் பொன் போலப் பொலிவு பெற்ற மேனியிலே புண்பட்டதே' என்று இரங்குகிருர். அதே சமயத்தில் அந்தப் புண் சுமந்த மேனியே அவனுடைய பெருங்கருணைக்கு அடையாளம் என்று எண்ணிப் பார்க் கிருர். அந்தப் புண் சுமந்த மேனியையே பண் சுமந்த பாடலால் பாடலாம். வாருங்கள் என்று அம்மான ஆடும் பெண்களே அழைக்கிருர். . . . புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மாய்ை, ஆண்டவன் அருள் சுமந்து வந்து, அருட்சத்தியையே சுமந்து வந்து, மண் சுமந்து, புண் சுமந்து, விண் சுமந்த கீர்த்தியைச் சுமந்து, பண் சுமந்த பாடற்பரிசைப் படைத்து விளங்குகிருன். இந்தப் பாட்டு பக்தியைச் சுமந்து, பண்ணைச் சுமந்து, சுவையைச் சுமந்து, சொல் நயத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/85&oldid=895001" இலிருந்து மீள்விக்கப்பட்டது