பக்கம்:திரு அம்மானை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திரு அம்மானே சுமந்து, உருக்கும் இயல்பைச் சுமந்து கொண்டு விளங்கு கிறது. பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான், விண்சுமந்த கீர்த்தி, வியன்மண்டலத்தீசன், கண்சுமந்த நெற்றிக் கடவுள், கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மாய்ை! "அம்மானை ஆடும் பெண்ணே, இசையைத் தாங்கிய பாடல்களுக்கு உரிய இயல்புகளைத் தனக்கு உரியனவாகக் கொண்டருளியவனும், உமாதேவியாகிய பெண்ணேத் தாங்கிய வாம பாகத்தை உடையவனும், எங்கள் தலைவனும், திருப்பெருந்துறையென்னும் தலத்தில் நித்திய வாசம் செய்பவனும், தேவலோகத்தில் நிரம்பித் தங்கிய புகழை உடையவனும், விரிந்த அண்டங்களுக் .ெ க ல் லாம் ஈசுவரனும், கண்ணேத் தாங்கிய திருதுதலைப் பெற்ற கடவுளும் ஆகிய சிவபெருமான் இந்த எளியேன் பொருட்டு, மக்கட் கூட்டம் நிரம்பியதல்ை ஆரவாரம் மிக்க மதுரை யில், மண்ணச் சுமந்து, அதற்குரிய கூலியையும் பெற்றுக் கொண்டு, அந்த மன்னல்ை அடிபட்டு, அதல்ை உண்டான புண்ணேத் தாங்கிய திருமேனியை நாம் பாடுவோம்." (பண்-இராகம், பாடல் பண்னேடு இருக்கிறது. பாடலுக்குரிய பரிசு பாடலாகிய பரிசு என்றும் கொள்ள லாம். படைத்தருளும் சிவன். படைத்தருளும் என்பது அடுத்துவரும் பெண்ணுக்கு அடையாகாமல், பெண் சுமந்த பாகத்தன் என்று அனைத்தும் ஒரு பெயராக கிற்க, அதற்கு அடையாயிற்று. பெண் சுமந்த பாகத்தன் என்பது சிவ பெருமான் என்று ஒரு பெயர் போல கின்றது. பெருமான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/86&oldid=895003" இலிருந்து மீள்விக்கப்பட்டது