பக்கம்:திரு அம்மானை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அந்தம் இலா ஆனந்தம் சிவபெருமான நெடுந்து ரத்திலிருந்து தரிசித்தாலே அவனே அடையாளம் கண்டு கொள்ளலாம். அவன் தன் திருமுடியில் சந்திர கண்டத்தைச் சூடியிருக்கிருன், அரை குறையாக உள்ள சந்திரனிலும் மிகச் சிறிய ஒரு கலையை அணிந்திருக்கிருன். சந்திரன் தேய்வதும் வளர்வதும் இல் லாமல் இருக்கும்படி தன் திருமுடியில் சூடியிருக்கிருன் தக்கன் இட்ட சாபம் அவனே அணுகாமல், அவனுக்குப் புகல் அளித்து அவ்வாறு செய்துள்ளான். துண்டப் பிறையான். அவன் வேத சொரூபமாக இருக்கிருன். வேதத்தின் பொருளாக இருக்கிருன். அதைத் தானே பாடிக்கொண்டு அதற்கு கித்தியத்துவத்தை வழங்கியிருக்கிருன் அவனே திருப்பெருந்துறைக்கு வந்து, அடியார்கள் வழிபட்டு உய். வதற்காக நீத்திய வாசம் செய்கிருன். மறையான், பெருந்துை றயான். - அவனுடைய திருமுடியைத் தரிசித்துக் கொண்டு, பார்வையை இறக்கி, அவன் திருமார்பைப் பார்த்தால் அங்கே முப்புரி நூல் பளிச்சென்று தெரிகிறது; அவன் அகாதி அந்தண்ன் என்பதை அது காட்டுகிறது. - - கொண்ட புரிநூலான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/88&oldid=895009" இலிருந்து மீள்விக்கப்பட்டது