பக்கம்:திரு அம்மானை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தம் இலா ஆனந்தம் ?5。 அவன் மணிவாசகருடைய பெருமையைப் புலப்படுத்து வதற்காகக் குதிரைச் சேவகனக வந்தான். பார்ப்பதற்கு அழகிய திருக்கோலத்தைக் கொண்ட குதிரையின்மேல் வந்தான். வேதமே குதிரையாக வடிவெடுத்து அவனைத் தாங்கி வந்தது. - - கோல் மா ஊர்தியான். அவனுடைய திருக்கழுத்து, கருமையாக இருக்கிறது. உலகமெல்லாம் உய்யும் பொருட்டு அவன் ஆலகால நஞ்சை உண்டு தன் கழுத்தில் நிறுத்திக் கொண்டான். அந்த அருட் செயலே யாவரும் அறியக் காட்டிக்கொண்டு அந்த கஞ்சு அவன் கண்டத்தில் விளங்குகிறது. அவன் நீலகண்டன் ஆன்ை. - - கண்டம் கரியான். அவனுடைய திருமேனி செக்கச் செவேல் என்று. பவளம் போல விளங்குகிறது. அந்தத் திருமேனியில் தூய்மையும் வெண்மையும் உடைய திருற்ேறைப் பூசியிருக் கிருன். சிவந்த திருமேனியில் பூசிய வெண்ணிறும், அவன் திருமார்பில் அணிந்த முப்புரிநூலும், அவன் திருமுடியில் அணிந்த பிறையும், நீலகண்டமும் எடுப்பாகத் தோன்று கின்றன. - - செம்மேனியான், வெண்ணிற்ருன். அண்டங்கள் பல. அவல்ை படைக்கப்பட்டவை. அவை. அவற்றிற்கெல்லாம் மூலகாரணகை விளங்கு கிருன் அவன். - அண்டமுதல் ஆயினன். - அவன் அடியார்களுக்கு ஆனந்தத்தை வழங்குகிருன்.. பொறிகளால் நுகரப்படும் இன்பம் அழியக் கூடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/89&oldid=895011" இலிருந்து மீள்விக்கப்பட்டது