பக்கம்:திரு அம்மானை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

マ6 திரு அம்மானே சுகம், துக்கம் என்னும் இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. சுகம் இருந்தால் துக்கம் இருக்கும்; துக்கம் இருந்தால் சுகம் இருக்கும். இவை இரண்டும் உயிர்களுக்கு மாறி மாறி வரும். இவை கிலேயாக இருப்பன அல்ல. ஆனல் ஆனந்தம் என்பது அத்தகையது அன்று. அது இந்திரியங்களாலோ, அவற்றின் வாயிலாக மனத்தினலோ நுகரப்படுவதன்று. அது உயிரினல் அநுபவிக்கப்படுவது. சரிரங்களின் தொடர்பு இருக்கிறவரைக்கும் சுகதுக்கங்கள் இருக்கும். சரீரத்தில் இருக்கும் போதே ஆத்மாவில் ஆனக் தத்தை அநுபவிப்பார்கள் ஜீவன் முக்தர்கள். இங்கே உடம்புடன் இருக்கும் போதே நுகரும் பேரின்பம் அது. இந்த உடம்பை விட்டவுடன் ஆனந்தக் கடலில் ஆழ்ந்து விடும் உயிர். அந்த ஆனந்தம் முடிவற்றது. அதை இறை வன் அடியவர்களுக்கு வழங்குகிருன். அந்தம் இலா ஆனந்தம் * = < * * * * * * * * * * * * * ஈந்தருளும். அவனுடைய அடியார்கள் இந்தப் பிறப்பிலே புதியவர் களாக அன்பு செய்யவில்லை. பிறவிதோறும் அன்புகொண்டு, வர வர அந்த அன்பில் முதிர்ச்சி பெற்று வருவார்கள்; அது முற்றிப் பழுக்கும்போது ஆனந்தம் கிடைக்கும். பல பிறவிகள் எடுத்து அன்பு செய்து, இந்தப் பிறவியில் அது முழுமை பெற்றதனுல், இனிப் பிறவாத இன்பத்தை அவர்கள் பெறுகிருர்கள். . “பல்லுழி காலம் பயின்று அரனை அர்ச்சிக்கின் நல்லறிவு சற்றே நகும்’ * என்பர். ஆகவே, இந்த ஒரு பிறவியில் அன்பு செய்தார் கள், அதல்ை முத்தி அடைந்தார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் பழ அடியார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/90&oldid=895015" இலிருந்து மீள்விக்கப்பட்டது