பக்கம்:திரு அம்மானை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தம் இலா ஆனந்தம் 7?” -- "ஐயா! பழவடியேம் வந்தோங்காண்” என்று மணிவாசகரே பிறிதோரிடத்தில் கூறுகிருர். இறைவன் ஈந்தருளும் ஆனந்தத்தில் வேறுபாடு இல்லை; இது முதல் தரமான ஆனந்தம். இது இரண்டாங் தரம் என்று சொல்ல முடியாது. கிருத யுகத்தில் அன்பு செய்தவர்களுக்கு இந்த உயர்ந்த ஆனந்தம், பின் யுகங்களில் அடியாரானவர்களுக்குச் சற்றே தரம் குறைந்த ஆனந்தம் என்ற வேறுபாடு இல்லை. அகாதிகாலமாக இறைவன் அடி யார்களுக்கு இந்த ஆனந்தத்தை வழங்கிவருகிருன். மிகப் பழங்காலத்தில் எப்படி முழுமையான ஆனந்தத்தை அடி. யவர்களுக்கு வழங்கினனே, அப்படியே இன்றும் வழங்கு, கிருன்; இனியும் வழங்குவான். பண்டைப் பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும். இத்தகைய அருட்செயல் மிகவும் வியத்திற்குரியது. எதிர் பாராமல் ஒரு வள்ளல் வயிறு நிறையச் சோறு போட். டால், அவனே வியக்கிருேம். தங்கக் கிண்ணத்தைத் தானமாக வழங்கினல் நமக்குப் பெரு வியப்பாக இருக்கிறது. மிகவும் உயர்ந்த உலோகமாகிய அதைப் பல பேருக்குப் பல காலமாக ஒரு வள்ளல் கொடுத்துவருகிருன் என்ருல் நம்பவே முடியாது. அதை உண்மை யென்று. அறிந்து கொண்டால் அதைக் கண்டவர்கள் வியப்படை வார்கள்; அவர்கள் வாயிலாகக் கேட்டவர்களுக்கும். வியப்பை உண்டாக்கும். - - * . . . . அவன் புகழ் வர வர எங்கும் பரவி எவருக்கும் வியப்பை உண்டாக்கும். அளிக்கும் பொருளின் தன்மை யும் அளவும் மிகுதியாக ஆக, அதனை வழங்குகிறவனுடைய புகழ் எங்கும் பரவும். அவனே யாவரும் வியந்து பாராட்டு வார்கள். எந்தப் பயனேயும் எதிர்பாராமல், இரவலர்களு. டைய நன்மை ஒன்றையே கருதி, மிக உயர்ந்த பொருள் களே இடையீடில்லாமல் தரும் வள்ளல்கள் இந்த உலகத் தில் இல்லை. இறைவன் ஒருவன்தான் அத்தகைய வள்ளல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/91&oldid=895017" இலிருந்து மீள்விக்கப்பட்டது