பக்கம்:திரு அம்மானை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?8 திரு அம்மானை எல்லாவற்றிலும் உயர்ந்ததும், முடிவே இல்லாததும், உயிரி ல்ை நுகரப்படுவதும், எல்லோருக்கும் கிடைப்பதற் கரியது மாகிய சிவானந்தத்தை அருளும் அந்த வள்ளலின் புகழ் ஓர் ஊரில் மட்டுமா பரவும் உலகம் முழுவதும் பரவும். எல்லா அண்டங்களிலும் பரவும். அதல்ை அண்டங்களில் எல்லாம் உள்ளவர்கள் அவனே வியந்து பாராட்டுவார்கள். இப்படி அவன் பழ அடியார்களுக்கு அந்தமிலா ஆனங் தத்தை ஈய, அந்த வள்ளன்மையை அண்டங்களெல்லாம் அறிந்து வியப்புறுகிறது; அவ்வாறு வியப்புறும் செயல காம் பாடுவோம்’ என்று அம்மானே ஆடும் பெண்ணுகத் தம்மைப் பாவித்துக் கொண்ட மணிவாசகர் பாடுகிரு.ர். துண்டப் பிறையான், மறையான், பெருந்துறையான் கொண்ட புரிநூலான், கோலமா ஊர்தியான், கண்டம் கரியான், செம்மேனியான், வெண்ணிற்ருன், அண்டமுதல் ஆயினன், அந்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே பழஅடியார்க்கு ஈந்தருளும்; அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மாய்ை! "அம்மானை ஆடும் பெண்ணே, துண்டமாகிய பிறையை அணிந்தவனும், வேத வடிவாக இருப்பவனும், திருப்பெருந்துறையில் எழுந்தருளி யிருப்பவனும், திருமார் பில் அணிந்து கொண்ட முப்புரி நூலே உடையவனும், அழகிய வேதமாகிய குதிரையை வாகனமாக உடையவனும், திருக்கழுத்து கஞ்சுடைமையால் கரிய தாக உள்ளவனும், செம்மையான வண்ணம் பெற்ற திருமேனியை உடையவனும், தூய வெள்ளைத் திருநீற்றை அணிந்தவனும், அண்டங்களுக்கெல்லாம் முதல்வகை இருப் பவனும், முடிவே இல்லாத சிவானந்தத்தைப் பழங்காலத் தில் வழங்கியபடியே பிறவி தோறும் தொடர்புடைய பழைய அடியவர்களுக்கு சந்தருள்வான்; அவ்வாறு அவன் ஆனந்தம் வழங்குவதை எல்லா அண்டங்களும் வியந்து பாராட்டும் திறத்தை நாம் பாடுவோமாக".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/92&oldid=895019" இலிருந்து மீள்விக்கப்பட்டது