பக்கம்:திரு அம்மானை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தம் இலா ஆனந்தம் 79 (துண்டம்-பிளவு. பிறையான், மறையான், பெருந்: துறையான் என்பவற்றில் எதுகை நயம் அமைந்துள்ளது. கோலம்-அழகு. மா-குதிரை. வேதத்தையே இறைவன் குதிரையாகக் கொண்டுள்ளான். அண்டமெலாம் ஆதார மாகத் தாங்கும் ஆனந்தத் தனிச்சோதி அண்டம் தாங்கும். சண்டமறைப் பரிதனக்கா தார மாகித் தரிக்க ” . - ~ என்று திருவிளையாடற் புராணத்தில் வருகிறது. கண்டங் கரியான் செம்மேனியான் வெண்ணிற்ருன் என்ற அடியில் முரண் நயம் அமைந்தது. பண்டைப் பரிசே-பழையபடியே. அந்த ஆனந்தம் அன்றும் இன்றும் ஒருபடித்தாகவே இருப்பது என்பதை அந்தமிலா ஆனந்தம், பண்டைப் பரிசே என்பவற்ருல் அறியலாகும். சந்தருளும்-வழங்கி யருள்வான். அப்படி அருளும் திறத்தைப் பாடுதும் என்று செயப்படு பொருளே வருவித்து முடிக்க. அண்டம்எல்லா அண்டங்களும்; தேவலோகத்தில் உள்ள தேவர் கள் என்றும் கூறலாம்; தமக்குக் கிடைத்தற்கு அரிய ஆனந்தத்தை அடியார்கள் பெற்றதைக் கண்டு அண்ட வாணர்களாகிய தேவர்கள் வியப்புறுகிருர்கள். வியப் புறுமா-வியப்புறுமாற்றை, விகாரம், ஈந்தருளும் ஆற்றை, அண்டம் வியப்புறும் ஆற்றை எனத் தனித்த்னியே கூட்டிப் பொருள் செய்வதும் ஆம். அண்டம் வியப்புறும் வண்ணம் போல நாமும் வியந்து பாடுவோம் என்றும் பொருள் கொள்ளலாம்.) - . இறைவன் அடியார்களுக்கு வழங்கும் சிவானந்த அநுபவத்தை வியந்து பாடியது இப்பாட்டு. - இது திருவம்மானையில் வரும் 9-ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/93&oldid=895021" இலிருந்து மீள்விக்கப்பட்டது