பக்கம்:திரு அம்மானை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான் 83 பெண் ஆளும் பாகனை. - - - அத்தகைய அருளாளன் மணிவாசகரை ஆட்கொண் டான்; அடியார்கள் பூசித்து வணங்கும் திருப்பெருங் துறைக்கு எழுந்தருளி மணிவாசகருக்கு அருள் செய்தான். அவன் திருவடியைக் காண வேண்டுமென்று எத்தனையோ பேர் ஏங்கியிருக்க, அவன் தன் பெருங்கருணையினல் திருப் பெருந்துறைக்கு வந்து கண் நிறைந்த அழகையுடைய தன் திருவடியை மணிவாசகருக்குக் காட்டினன். தன்னுடைய அழகிய திருவடியைக் காட்டி அவன் மணிவாசகரை அடிமை கொண்டான். அதற்குப் பல வகை யாலும் தகுதியுடையவர் வாதவூரடிகள் என்ருலும் அவர் தம்மைச் சிறிதும் தகுதியில்லாதவரென்றே கருதும் இயல்பு கொண்டவர். கான் என் தகுதி காரணமாக இறை வனுடைய அருளைப் பெற்று அவனுக்கு ஆளானேன். என்று சொல்ல அவருக்குத் தெரியாது. காய் போன்ற இழிவுடைய என்ன அவன் ஆட்கொண்டான்' என்று அடுத்தடுத்துச் சொல்வதே அவர் இயல்பு. அதுவே அவர் பெருமைக்கு அடையாளம். - பேணு பெருந்துறையில் கண் ஆர் கழல் காட்டி நாயேன ஆட்கொண்ட. அவன் தன்னுடைய திருவடியைக் காட்டிய பிறகு, அதைக் கண்ட கண் அந்தக் காட்சியாலே கிரம்பிவிட்டது. அது இப்போது வேறு எதையும் காண்பதில்லை. எதைக் கண்டாலும் அந்தத் திருவடியாகவே காட்சி அளிக்கிறது. கண் ஆர்ந்த கழல் அது. - அப்படித் திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட எம்பெரு மானே திருவண்ணுமலையிலும் எழுந்தருளியிருக்கின்ருன். சோதி வடிவாக கின்ற அண்ணுமலேயப்பன் மாணிவாசகப் பெருமானுடைய கண்ணே நிரப்பிய அழகுக் கழல் உடைய'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/97&oldid=895028" இலிருந்து மீள்விக்கப்பட்டது