பக்கம்:திரு அம்மானை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. திரு அம்மானே இறைவன் அடியில் முடிவைத்து வணங்குவதையே மான் பாக கினைத்தார்கள். சக்கரவர்த்தி திருமகனாகிய இராமன் பூநீரங்கநாதனப் பணிந்து வழிபட்டு கலம் பெற்ருன். மண் ஆளும் மன்னவர்க்கு மாண்பாகி கின்றன. அப்படி உள்ள சிவபெருமான் தண்மை கிறைந்த பாண்டி காட்டைத் தன்னுடைய ஆட்சி நிலமாகக் கொண்டு எழுந்தருளின்ை. தண்மையுடைய தமிழைப் பாதுகாத் தான்; தமிழை வளர்த்தான். தமிழை வளர்ப்பதில் பாண்டி காடு சிறப்புற்றிருந்தது. அதல்ை அதைத் தமிழ் நாடு என்று சொல்லும் வழக்கு உண்டாயிற்று. அந்த காட்டை ஆட்சி செய்யும் பாண்டிய மன்னனுகவே இறைவன் இருந்து கலம் செய்தான். தண் பாண்டி நாடு தமிழை அளித்தது. அதனைத் தண்ணளியால் பாதுகாத்து அதற்குத் தெய்விகத் தன்மை ஏறும்படி செய்தான் இறைவன். "பாண்டி நாடே பழம்பதி யாகவும் என்று பாடுவார் மணிவாசகர். - தண்ளுர் தமிழ் அளிக்கும் தண்பாண்டி காட்டான பாண்டிநாடு தண்மை நிறைந்தது; அங்கே தண்மை நிறைந்த தமிழை அளித்துப் பாதுகாத்தான் இறைவன். அவனும் தண்மையாகிய அருள் கிரம்பியவன். அதற்கு அடையாளமாக அருளே திருவுருவான உமாதேவியை ஒரு பாதியாகக் கொண்டிருக்கிருன். அவனிடம் அந்த அருள் ஆட்சி செலுத்துகிறது. அருள் இல்லாவிட்டால் ஆள முடியாது. அருள் கிரம்பியவனே குடிமக்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவனுவான். தண்பாண்டிநாட்டானகிய இறைவனுடைய ஒரு பாதியில் அருளுருவாகிய அன்னே குடி கொண்டு ஆட்சியை கடத்துகிருள்; அவனிடம் அருள் பொங்கும்படி செய்கிருள். , ' ' '4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/96&oldid=895026" இலிருந்து மீள்விக்கப்பட்டது