பக்கம்:திரு அம்மானை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அளிக்கும் தண்பாண்டி காட்டான் 81 அரசன். அவனே மாட்சிமை பொருந்திய மன்னன் என்று குடிமக்கள் சிறப்பிப்பார்கள். பதவி, செல்வம், ஆட்சி யுரிமை, போகம், மதிப்பு முதலியவைகள் அவனுடைய மாட்சியைக் காட்டும் அடையாளங்கள். - ஆனால் இவை யாவும் உண்மையான மாண்புகள் ஆவதில்லை. அன்பு, இரக்கம், அறிவுடைமை, நன்மையை நாடும் இயல்பு, பெரியோர் நட்பு முதலிய அருங்குணங்கள் இருந்தால் அவற்ருல் உண்டாகும் மாண்பு சிறந்தது. பதவியும் பணமும் விக்ள விக்காத மாட்சியை அருங் குணங்கள் உண்டாக்கும். பலரும் காணப் பதவியில் வீற்றிருக்கும் மன்னவன் குண்ம் இல்லாதவகை இருந்தால் அவனுடைய குணக்கேடு மதியில் மறுப்போல எல்லாருக்கும் தெரியவரும். ஆதலின் அவன் தீய பண்புகளைச் சேராமல் விலக்கி, நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ால்ல பண்புகளுக்குள் தலையாயது இறைவனிடம் வைக்கும் பக்தி. குடிகளுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்க வேண்டிய மன்னன் பக்தியுடையவகை இருந்தால் தான், மன்னவன் எப்படி, மன்னுயிர் அப்படி என்றவாறு மக்கள் பக்தியுடையவர்களாக இருப்பார்கள். நாட்டினரை வழிப்படுத்தும் பொறுப்பை உடையவனதலால் அவன் தன் ஒழுக்கத்தினல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும் கிலேயில் இருக்கவேண்டும். பழங்காலத்து மன்னர்கள் சிறந்த பக்தர் களாக விளங்கிப் பல ஆலயங்களே எழுப்பி அங்கே கித்திய நைமித்திகங்கள் ஒழுங்காக நடைபெறும்படி செய்த்ார்கள். திருக்கோயில்களில் உள்ள கல்வெட்டுக்கள் இந்த உண்மையைப்i:புலப்படுத்தும். அவர்கள் செய்த திருத் தொண்டுகள் கல்மேல் எழுத்தாகக் காணுகின்றன. அந்த மன்னவர்கள் தம் தலைமேல் மணி முடியைத் தரித்திருப்பதைப் பெரிய மாண்பாக எண்ணுவதில்லை -6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/95&oldid=895024" இலிருந்து மீள்விக்கப்பட்டது