பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மு. பரமசிவம் :

விர:

வீர:

அதாவது மனிதர்கள் உண்மையில் மரணம் அடைகிறார்கள் என்பதாக நீர் நினைக்கிறீரா? உயிர் போய் விட்டது என்று நாம் சொல்லும் போது உண்மையில் உயிர் போகிறதா அல்லது உடல் மட்டும் போய் உயிர் இங்கேயே. இந்த உலகத்திலேயே இருக்கிறதா... இறந்து போனவர்கள் நம்மைப் பற்றி நினைக் கிறார்களா? நம்மைப் பார்க்க வருகிறார்களா? நம்முடைய நடவடிக்கைகளை அவர்கள் கவனிப்பதுண்டா?

தங்களுக்குத் தோன்றும் இந்தச் சந்தேகம்

எனக்கும் சில சமயங்களில் தோன்றுவதுண்டு. தீர்ப்பாரைத்தான் காணோம்.

எனக்கென்னமோ மரணம் என்பதே பொய் என்று தோன்றுகிறது. மரணத்துக்காக விசனப்படுவதும் மூடத்தனம் என்று நினைக்கிறேன். இந்த வீட்டில் முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஆயனச் சிற்பியும் அவருடைய மகள் சிவகாமியும் வாழ்ந்தார்கள். அப்போதெல்லாம் ஜல்ஜல் என்ற சதங்கை ஒலியும், கல்கல் என்ற கல்லுளி ஒலியும் இங்கே மாறி மாறிக் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

தேவசேனன் சுவாரஸ்யமாகக் கேட்கிறான்.

சிவகாமி அற்புதமாக நடனமாடுவாள். அவருடைய நடனத் தோற்றங்களைப் பார்த்துப் பார்த்து ஆயனச் சிற்பியும் அழகாக சித்திரம் எழுதுவார். சிலைகள் வடிப்பார்.

ப்போது கூட ஆயனரும், சிவகாமியும்