பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 105

இங்கே இல்லை என்று என்னால் நம்பவே முடியவில்லை. அவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

இதோ உற்றுக் கேட்டால் சதங்கை ஒலியும், கல்லுளி ஒலியும் என் காதுக்குக் கேட்கின்றன. அந்தச் சிவகாமிதான் இந்த தெய்வீகக் களையுள்ள பெண். அது மகேந்திர சக்கரவர்த்தியின் காலம். அவருடைய புதல்வரான மாமல்லருக்கு அப்போது உம்முடைய வயதுதானிருக்கும். இந்தப் பெண்ணிடம் தம் இதயத்தைப் பறி கொடுத்து விட்ட அவர் இங்கே அடிக்கடி வருவார். நானும் அவருடன் வருவேன்.

இருவரும் இந்த வீட்டுக்கு அருகே உள்ள தாமரைக் குளக்கரையில் அந்தி மயங்கும் போது சந்திப்பார்கள். ஆடிப்பாடி மகிழ்வார்கள். அவர்களுடைய காதலுக்குத் துணையா யிருந்த மானும், மயிலும் கூட ஊடலுக்கும் துணையாயிருந்தன. அப்படி ஊடல் கொண்டிருந்தபோது ஒருநாள்... இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவதுதானே உலக இயற்கை?

இந்த இயற்கையை ஒட்டித் தானோ என்னவோ வாதாபி சக்கரவர்த்தியான புலிகேசி காஞ்சியின் மேல் படையெடுத்தான். அவனுடைய படை யெடுப்பைத் தம்முடைய ராஜதந்திரத்தால் முறியடித்துவிட்டார் மகேந்திரர். அதனால் ஆத்திரமடைந்த புலிகேசி நாட்டைச் சூறை