பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மு. பரமசிவம் :

இவ்வாறு அக்காலத்தில் திரு.விந்தன் கதைகள் பல தரப்பட்ட மக்களால் பாராட்டப்பெற்றன. நாவல்கள் எழுதிப் புகழ்பெற்ற 'கல்கிக்கு இணையாக விந்தனும் புகழப்பெற்றவர்.

விந்தன் கதைகள் எழுதுவதற்கு மூடை எதிர் பார்த்து வீட்டின் கூரையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அவர் சொல்லுவார்

'விதியில் கொஞ்ச தூரம் நடந்து போனால் பல தரப் பட்ட மனிதர்களைச் சந்திக்க நேரும்; அப்போதே என்னுள் ஒரு கதை உருவாகிவிடும்/

நண்பர்களுக்கு விருந்து வைப்பதில் மிகவும் விருப்பமுடையவர் விந்தன். புரசைவாக்கத்தில் குடியிருந்த நான், விந்தன் குடியிருந்த சேத்துப் பட்டுக்கு வாரந்தோறும் தவறாமல் வந்துவிடுவேன், விந்தன் வீட்டில் விருந்து சாப்பிட, பெரும்பாலும் அசைவ உணவுகள்தான் பரிமாறப்படும். விந்தனுக்கு அசைவ உணவு உண்பதில் விருப்பம் அதிகம்.

1952இல் அமரர் சிவாஜி கணேசன் நடித்த 'பராசக்தி படம் வெளியானது. அந்தப் படத்தில் சிவாஜி கணேசன் உணர்ச்சித் துடிப்புடன் பேசும் 'ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்னும் கவிதை வரிகளின் சொந்தக்காரர் விந்தன் அவர்களேயாவார்.

1950இல் 'கல்கி பத்திரிகையில் விந்தன் எழுதிய 'பாலும் பாவையும் என்ற நாவலில் வரும் வசனத்தைக் கலைஞர் பயன்படுத்திக் கொண்டார். பாலும்