பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மு. பரமசிவம் :

கவனித்தார். அவர் உள்ளம் கொதித்தது. தயாரிப்பாளர் ஒரு மனிதன் என்பதை மறந்து அவனிடம் வாங்கிய வேலைகள் கீழ்த்தரமானவை. எதையும் பொருட் படுத்தாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறியில் அவர்கள் செயல்பட்டாலும் அதைப் பார்த்தவர்களுக்குக் கோபம்கோபமாக வந்தது.

விந்தன் சினிமாவில் வேலை செய்யாவிட்டாலும் அவரின் சிந்தனைகள் முழுவதும் சினிமாவைச் சுற்றிச் சுற்றி வந்தது. சினிமாவில் சூழ்ந்துள்ள அழுக்குகள் நீங்கி அது பளிச்சென்று ஒளிவீச வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவரின் கனவுகள், எதிர் பார்ப்புகள் எல்லாம் பழங்கனவாய்ப் போய்விட்டன!

இடதுசாரி நோக்குடைய கதாசிரியர், இயக்குநர், நடிகர் இந்த மூன்று பேரும் ஒன்று சேர்ந்து திரைத் துறையில் ஒரு திருப்புமுனையை உண்டாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்புகளை அரசியல் குறுக்கீடுகள் (இடதுசாரிகளின் சிந்தனையைத்) திசை திருப்பி விட்டன!

அடுத்து நடிகர்கள் எம்.எல்.ஏ.க்கள் ஆனார்கள்; பிறகு முதல்வரானார்கள். அவ்வளவுதான்! நாடே நடிகர்கள் பக்கம் சாய்ந்துவிட்டது.

★ 大 ★