பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 185

இத்தகைய சூழலில் ஒரு பத்திரிகையாளர், 'ஒரு தமிழன் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த நூலில் சில இருட்டடிப்புகள், பிழைகள் உள்ளன. அந்த நூலின் 367ஆம் பக்கத்தில் இப்படி எழுதுகிறார்:

'எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் சேர்ந்து நடித்த படம் கூண்டுக்கிளி 1954இல் வெளியானது. இந்தப் படத்தை டைரக்ட் செய்தவர் டி.ஆர்.ராமண்ணா. இரண்டு மாபெரும் நடிகர்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றிக் கண்ட ராமண்ணா அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்.மோசமான கதை என்பது முக்கிய காரணம். பத்மினி, சாவித்திரி, பானுமதி ஆகியோர் கொடி கட்டிப் பறந்த காலத்தில் பி.எஸ்.சரோஜா, குசலகுமாரி ஆகியோரை கதாநாயகியாக நடிக்க வைத்தது மற்றொரு காரணம். எழுத்தாளர் விந்தனின் வசனம் எடுபடவில்லை.

'மொத்தத்தில் வரலாற்று முத்திரை பதிக்க வேண்டிய இப்படம் படுதோல்வி அடைந்தது."

ஒருபடத்தின் வெற்றி தோல்வியாரிடம் உள்ளது? கதாசிரியரா? வசனகர்த்தாவா? பாடலாசிரியரா? டைரக்டரா? யார் கையில் உள்ளது? இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் ஆதிக்கம் வளர்ந்துள்ள நிலையில் ஒரு படத்தின் வெற்றி தோல்வி நடிகர்நடிகைகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.