பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மு. பரமசிவம் *

நாற்பது ஆண்டுக்கு முன்னால் வெளிவந்த கூண்டுக்கிளியில் சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடித்ததே படத்தின் தோல்விக்கு முக்கிய

காரணம்.

சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடித்ததைத் திரை உலகின் திருப்புமுனை என்ற பத்திரிகைகள் பாராட்டின. எல்லாம் இரண்டு நடிகர்களின் மனதைக் குளிரவைக்கவும் ரசிகர்களின் பாராட்டைப் பெறவும் பத்திரிகைகள் கையாண்ட உத்தி அது.

அக்காலத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செல்வாக்குடன் இருந்தது தி.மு.க வளரும் நேரம்.

இரண்டு நடிகர்களும் வெவ்வேறு இரு கட்சியைச் சேர்ந்தவர்கள். நடிகர்களின் ரசிகர்கள் போஸ்டர்களில் சாணியை அடித்துப் போராடிக் கொண்டிருந்தகாலம். சிவாஜி கணேசன் தி.மு.கவில் இருந்து விலகிக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததைத் 'திருப்பதி கணேசா என்று ரசிகர்களால் விமர்சிக்கப்பட்ட காலம்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இரண்டு நடிகர்களின் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கவும் ரசிகர்களிடையே ரசா பாசங்கள் நிகழ்வதையும் நிறுத்தும் பொருட்டு படத்தை மேற்கொண்டு வெளியிட விரும்பவில்லை. நடப்புகள் இவ்வாறு இருக்க கூண்டுக்கிளி படத்தின் தோல்விக்கு முழுக்காரணம் எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும்தான் என்று எழுத நெஞ்சுரம்