பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 41

இராமாயணம், இளங்கோவடிகளுக்கு ஒரு சிலப்பதிகாரம், பாரதிக்கு ஒரு பாஞ்சாலி சபதம், பாரதிதாசனுக்கு ஒரு குடும்பவிளக்கு - என்று சிறப்படைந்தது போல் விந்தனின் எழுத்தாற்றலை எக்காலத்திலும் எடுத்துக் சொல்லக்கூடிய நாவல் 'பாலும் பாவையும் என்பதே. இது தமிழ் முற்போக்கு இலக்கிய உலகின் ஒட்டு மொத்தமான கருத்தாகும்.

விந்தனுக்கு இவ்வளவு சிறப்புக்களைச் சேர்த்த இந்த நாவல், அவருக்கு எத்தகைய பாதிப்புகளை, பலவீனங்களை ஏற்படுத்தியது என்பதையும் இந்தச் சமயத்தில் கவனிக்கத் தக்கது.

'பாலும் பாவையும் தொடர்கதை 'கல்கி'யில் தொடராக வெளிவந்தபோது, பிறர் எழுத்தை நான் படிப்பதேயில்லை' என்று கர்வத்தோடு சொல்லிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் பலரை, பலமுறை படிக்க வைத்துச் சொல் புதிது', 'சுவை புதிது என்று சொல்ல வைத்த நாவல்.

எழுத்தாளர் அகிலன் சொன்னார் :

'பாலும் பாவையும் என்ற நாவலின் வாயிலாகத் தமிழ் வாசகர் உலகமே வியப்புறச் செய்து, யார் இந்த விந்தன்? என்று கேட்க வைத்த நாவல் அது. கதை, கருப்பொருள், எழுத்து, நடை, உருவம் எல்லா வற்றிலும் ஒரு புதுமை தெரிந்தது. அந்த நாவலில் இலக்கியப் படைப்புக்கு வேண்டிய உயிர்த்துடிப்புகள் காணப்பட்டன. (வித்தனும் விமர்சனமும் 64-65/