பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 43

வேறொரு சமயத்தில் டி.ஆர்.ராமண்ணா விந்தன் சினிமாவுக்கு வந்ததை விவரமாக விவரிக்கிறார். "திரைக்கதை - வசனம் எழுத, புதியவராக ஒருவரை அறிமுகப்படுத்த விரும்பினேன். புகழோடும் ‘பிசி'யாகவும் இருந்த வசனகர்த்தாக்களை ஏற்பாடு செய்தால் குறிப்பிட்ட நாளில் அவர்களிடம் எழுதி வாங்குவது சிரமமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

'தவிர,புதிதாக இயக்குநர் பணிக்கு வருவதால் அவர்கள் என் கருத்துக்கு மதிப்பு அளிப்பார்களா என்ற தயக்கமும் என்னுள் இருந்தது. கல்கி பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்து வந்த விந்தன் என் நினைவிற்கு வந்தார். அவரது முழுப் பெயர் கோவிந்தன். அவர் 'கல்கி'யில் எழுதிய 'பாலும் பாவையும் தொடர்கதை எனக்கு மிகவும் பிடித் திருந்தது. பாலும் பாவையும் கெட்டுப் போனால் பயன் படாது என்ற கருத்தை அந்தக் கதையில் வலியுறுத்தி இருந்தார்.

"அவரது கருத்துக்களில் இருந்த அர்த்தமும் ஆழமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. எனவே 'வாழப் பிறந்தவள்’ படத்திற்குத் திரைக்கதை அமைத்து வசனம் எழுதும் பணியை அவருக்குத் தரலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் கல்கி பத்திரிகையின் ஆசிரியர் கல்கி அவர்கள் அதற்கு அனுமதி அளிப்பாரா என்ற சந்தேகம் குறுக்கிட்டது. எதற்கும் ஆசிரியரைச் சந்தித்துக் கேட்டுவிடுவோம்