பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மு. பரமசிவம் *

7

1954இல் தமிழ் சினிமாவில் ஒருத்திக்கு ஒருவன்' என்னும் கருத்து பழமையானது, பத்தாம் பசலித்தனமானது என்று கருதப்பட்டதால், 'இருவருக்கு ஒருத்தி என்பதே புதுமையானது என்கிற கருத்தோட்டத்தில் சில படங்கள் வெளிவந்தன.

அதுவும் பழமையானது. பிற்போக்குத்தனமானது என்று கருதிய முற்போக்குச் சிந்தனையாளர்கள் விந்தனும் டி.ஆர். ராமண்ணாவும் ஒருத்திக்கு இருவர் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் "கூண்டுக்கிளி'என்ற படத்தைத் தயாரித்தனர்.

முன்பே 'பாலும் பாவையும் நாவலில் வரும் கதாநாயகி மூன்றுமுறை கெட்டுப் போகிறவள்! அவளின் கதையைத் தமிழ்சினிமா ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்று சொன்ன விந்தனின் கருத்தை ஆதரித்த ராமண்ணாதான் கூண்டுக்கிளியைத் தயாரித்தார்.

கூண்டுக்கிளியின் கதை

ஜீவா ஒரு தனிப்பிறவி, பச்சையாகச் சொல்லப் போனால் ஒரு பைத்தியம். அவனுக்கு மங்களாதான்