பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நீ சப்பை ஆகி விட்டாய்; அது அவர்கள் உன் தொழிலுக்குத் தந்த ஊதியம், நீ வேதியன்; சாத்திரங்கள் அறிந்தவன்; அவை பாத்திரங்கள் நிரப்பிக் கொள்வதற்கு அல்ல; நேத்திரம் திறந்து சூத்திரங்களை எடுத்துக் கூறத்தான். விதுரரே நீர் சொல்லில் விதுரர். சுகமான வார்த்தைகளைப் பேசிச் சுமுகமான வாழ்க்கை நடத்த விரும்புகிறீரா? பெற்றால்தான் அவர்கள் பிள்ளைகளா! உன் மூத்தவன் குருடன் இருளில் உழல்பவன்; மருட்சி அவன் வாழ்க்கை; அவனால் அவர்களைக் கண்டித்துத் திருத்த முடியாமல் போய்விட்டது: