பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 'பெண் என்றால் என்ன? அந்த மென்மையை அறியாத மரக்கட்டை நீ! மானம் அவமானம் இவை உன் ஞானத்துக்கு எங்கே எட்டப் போகிறது? கண்டும் காணாமல் மவுனம் சாதிப்பது ஏன்?" என்று அந்தத் தொண்டு முதியவனைக் கேட்டாள். அடுத்தது நூல் கற்ற அறிஞன், ஆசான் துரோணன்; 'வில் கற்ற நீ வீரம் கற்க மறந்தது ஏன்? ஆசான் என்று சொல்லிக் கொள்கிற நீ இந்த நீச வேலையைத் தடுக்கக் கூடாதா? ஆசிரியன் நீ ஆசாரம்; அதை ஏன் இவர்களுக்குக் கற்றுத்தர மறந்தாய்? அவர்கள் உப்பை உண்டதற்காகவா