பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கோல் பிடித்த மணி முடியும், கதை எடுத்த தோளும், விற்பிடித்த கையும், வாள் பிடித்த கரங்களும் என் அண்ணனுக்கு வால் பிடிப்பதை வந்து கண்டு மகிழ்வு கொள்" என்று கூறி அவளைத் 'தர தர என்று இழுத்து வந்தான். அவையில் அவள் அலங்கோலமாக நிறுத்தப்பட்டாள்; விரித்த கூந்தல்; தழல் என எரித்த விழிகளும், சீறிய சினமும், எரி மலை என எழுந்த தோற்றம்: அவையை அதிரச் செய்தன; அவள் சொற்கள் வெடிகளை உதிர்த்து வெளிப்பட்டன. வீடுமனைப் பார்த்தாள்; அவன்தான் வயதில் மூத்தவன்; தாடி வைத்து இருந்தான்; சாடி அவனை இகழ்ந்தாள்: