பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 அவள் மகன் பக்கம் நின்று பரிந்து பேசினாள்; 'அத்தை மகள் நீ! அதனால் அன்பு பாராட்டி உன்னை அழைக்கின்றான். அவையில் அழைத்துச் சென்று மாலை மரியாதை செய்து பாராட்டுப் பத்திரம் வாசித்து அளித்துச் சீராட்டுவார்கள்; செல்க நீ" என்றாள். 'என் அண்ணன் கல்லில் தடுத்தபோது சொல்லிச் சிரித்தாயே அங்கே வல்லில் தம்மைத் தோற்று அல்லல் படுகின்றனர்; அவர்களைப் பார்த்துச் சி' பீடு பெற்றிருந்த அவர்கள் வாழ்வு கேடு உற்றது: அதைக் கண்டு சிரி; கட்டிய கணவர்கள் கை கட்டிக் கொண்டு மட்டிகளாய் நிற்பதைப்பார்