பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 எள் என்றால் எண்ணெய் கொண்டுவரும் எடுபிடிதுச்சாதனன் காந்தாரியின் இல்லத்தை நோக்கிக் கடுக நடந்தான். 'வருக! இங்கே வடிவுக்கரசி நின் கணவர் அங்கே வாடி இருப்பதை நேரடி வந்துபார்” என்று அவளைத் தொட்டு இழுக்க அருகில் சென்றான். மாமியின் இருப்பிலே அவள் காவலில் இருந்த காரிகையை அவன் அழைக்க நின்றான். 'அத்தை அவள் ஆதரவு தருவாள்' என்று கதறி அழுதாள்: 'அடைக்கலம் என்று உன்னிடம் யான் உன்னை அடைந்து உள்ளேன்; படைக்கலனாக இருந்து நீ தடுக்க வேண்டும்' என்று கேட்டாள்.