பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 எல்லாம் முடிந்த பிறகு கதை எழுத வருவார்கள்; காவல் துறையினர் வந்து விசாரிப்பது போல். கன்னனைப் பார்த்தாள்; அவன் தலை கவிழ்ந்து நின்றான்; துரியன் செய்வதைத் தடுத்து நிறுத்த திராணி இல்லை; மவுனம் சாதித்தான். அவனை நோக்கி ஆரணங்கு கொதித்தாள்; 'நீ வீரன் என்று சொல்லிக் கொள்கிறாய்; உன் ஆற்றலை விண் அளாவப் பேசுகிறாய்; ஆனால் கொடியவன் ஒருவனுக்கு விலை போகி விட்டாய். நட்பு உயர்ந்ததுதான் அது தீமைக்கு உடந்தை ஆவது அன்று அதைத் தடுத்து திருத்துவது: இடித்துச் சொல்லி அவனைக்கீழ்ப் படிய வைப்பதுதான் நட்பு: நீ நன்றி உள்ளவன்; அதுவே ஒருவருக்குச் சிறப்புத் தராது.