பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 சகவாசம், அதனால் ஏற்பட்ட விசுவாசம், அதற்குமேல் ஒருபடி நண்பனை உயர்த்துவது; அதை நீ செய்யத் தவறி விட்டாய், நீ கொடையாளி என்று கொட்டம் அடிக்கிறாய்; பொருள் கொடுத்தால் மட்டும்தான் கொடையாகாது; பிறர் துன்பம் களைதல் அதுவும் உயர் கொடையாகும். கொடுப்பதே எதற்காக? பிறர் துன்பம் தீர்ப்பதற்குத் தானே! மக்கள் வறுமைக்குக் காரணமாக இருக்கின்ற சுரண்டல்காரர்கள் தாம் தம்மை வள்ளல்கள் என்று மறைத்து வாழ்கிறார்கள். நீ புறஞ்சுவர் கோலம் செய்பவன்; வீண் பெருமைக்காரன்; பிறர் மெச்ச வேண்டும் என்று வாழ்கிறாய்; உள்ளத்தில் உனக்கு