பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 உயர்ந்த கொள்கை இல்லை; வெறும் பகட்டுக் காரன்தான்; நான் இங்கு அடிமைப் பட்டு இருக்கலாம்; அதுவல்ல செய்தி: இங்கு உன் உடன் பிறந்த தங்கை; சகோதரி அவள் அவமானப்படுத்தப் படுகிறாள்; அதை நீ வேடிக்கை பார்க்கிறாய். அதோ அங்கே கைகட்டி நிற்கிறார்களே! அவர்கள் உன் தம்பிமார்கள்! உடன் பிறவாமல் இருக்கலாம்; ஆனால் உடன் வளர்ந்த வரலாறு உள்ளது. தருமன் உன் தம்பி; அவன் மனைவி நான்; இந்த உறவை நீ மறந்து வாழலாம்; அது உனக்குத் தெரியாது; பழகி விட்டாலே அவர்கள் உடன்பிறந்தவர்கள்.