பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 உற்ற நண்பர்களுக்கு உறுகண் நேர்ந்தால் தடுத்துக் காப்பதுதான் தறுகண்மையாகும். யாராக இருந்தால் என்ன மனித நேயம் அது ஏன் உன்னிடம் மங்கி விட்டது? மூத்தவர்கள் இலை உதிரும் சருகுகள்: நீ தளிர் விடும் பச்சை மரம்; நீ வீரன் என்று கூறிக் கொள்கிறாய்; ஈரம் பசை யற்றுப் போனது ஏன்? என்றாவது நீ உன் நண்பன் துரியன் செயலைக் கண்டித்திருக்கிறாயா ஏன்? பதவி தந்து விட்டான், அது பறிபோகும் என்று அவன்பாடும் பல்லவிகளுக்கு நீ அனுபல்லவிகள் பாடிக் கொண்டிருக்கிறாய்.