பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நேரம் போனதே தெரியவில்லை அதற்குள் அவள் ஒன்றும் பாதியுமாகச் சமைத்துச் சோறு வடித்து வைத்தாள். பேச்சுகள் முடிந்தன விவாதங்கள் தீர்ந்தன; முனிவர் 'தமக்குப் பசி இல்லை' என்றார். 'செவிக்கு உணவு இல்லாத போதுதான் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' என்றார் வள்ளுவர். அந்தக் குறள் மொழி இங்கு உண்மையாகியது: போட்டதைச் சாப்பிட்டு மகிழ்ச்சியோடு எழுந்தார். இது துரியனின் சூழ்ச்சி; அவன் வடை, பாயசம், அறுசுவை உணவு இட்டு அவரை மகிழ்வித்துப் பின் அவரைப் பாண்டவர்பால் அனுப்பி வைத்தான்.