பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 அதற்குள் இந்தத் துருவாசர் வாசற்படியில் வந்து நின்றார். சோறு எப்படி வடித்துப் போடுவது? கறிகாய்கள் எங்கே தேடுவது? செட்டியார் கடை அங்கே யாரும் வைத்திருக்கவில்லை. நல்ல காலம் கண்ணன் அங்கு அந்த நேரத்திற்கு வந்து சேர்ந்தான். அவனிடம் தன் இயலாமையை அவள் அறிவித்துக் கைபிசைந்தாள் கண்ணனைக் கண்டதும் துர்வாசர் எல்லை இல்லா மகிழ்ச்சி கொண்டார்; வாசிஷ்டம், வேதாந்தம், இந்த வியாக்கனங்களில் அவர்கள் பேசிக் கொண்டே இருந்தனர்