பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 அரசனின் ஆசானாக நெருங்கிய நண்பனாக அறிவுரை கூறும் அறிஞனாக ஞானக் கோலத்தில் அங்குச் சேர்ந்தான். வீமன் சமையல் வல்லவன்; நளனுக்கு அடுத்து இவன் தான் பாகமாகச் சமைத்தான்; உண்பதற்குத் தக்க இடம் சமையல் கட்டு; அதுவே அங்கே தங்கிக் கொண்டால் தட்டுமுட்டு: வயிறுமுட்டத் தின்னலாம் நகுலன் குதிரை பராமரிப்பில் வல்லவன் குதிரை பராமரிப்பு அவன் ஏற்றுக் கொண்ட தொழில். சகாதேவன் சாது; ஆநிரைகளை மேய்க்க அவன் பொறுப்பேற்றுக் கொண்டான். வெளியே சென்று வர அது உதவியது. திரெளபதி அரசிக்கு அலங்கரிக்கும் பணிப்பெண் வண்ணமகள் தொழில் ஏற்றாள். அருச்சுனன் அரசமகளுக்குக் கலைகள் பயிற்றுவித்தான்;